இலியானா மீது தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு இருக்கிற மோகம், ஒரு செய்தியை கேள்விப்பட்ட நாளில் இருந்து அச்சமாக மாறியிருக்கிறதாம். தெலுங்கில் சக்தி என்ற படத்தில் நடித்தார் அவர். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ஒன்றரை கோடி.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை கொடுத்த இந்த படத்தில் இலியானாவின் ஒத்துழைப்பு மிக மிக கம்மியாம். படத்தின் ஹீரோவான ஜுனியர் என்.டி.ஆருக்கும் இவருக்கும் படப்பிடிப்பில் ஆரம்பித்த பிரச்சனை ரிலீசுக்கு பிறகும் தொடர்ந்ததாம். அதனால் படம் தொடர்பான எந்த பிரமோஷனுக்கும் நான் வரப்போவதில்லை என்று கூறிவிட்டாராம் அவர்.
இந்த காரணத்தாலும் படம் பிளாப் ஆகிவிட்டது. இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருக்கிறாராம். முடிந்தால் கொடுத்த சம்பளத்தில் பாதியை பிடுங்குவது.
இல்லையென்றால் இலியானாவுக்கு தொழில் தடை விதிப்பது. இரண்டு முடிவுகளை எடுக்கச் சொல்லி சங்கத்தை நெருக்குகிறாராம் அவர். யாருக்கு சாதகமாக முடிவெடுப்பார்களோ?
ஹன்சிகா மோத்வானியின் பருமனான உடம்பை பார்த்து வயசு இருபதுக்கும் மேல் இருக்குமா என்று கேட்கிறார்களாம் திரையுலகத்தில். உண்மையில் என் வயசு இவ்வளவுதான் என்று அவர் சொல்லும் வயசை கேட்டால் மயக்கமே வந்துவிடும். பதினாறுக்கும் கம்மி என்கிறாராம்.
சிவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்ற வடிவேலுவின் டயலாக் இவருக்கு தெரிந்து இப்படி சொல்கிறாரோ என்று கிண்டலடித்தாராம் ஒரு ஹீரோ. எப்படியோ இவர் குறித்து ஆராய்ந்து பார்த்து விசாரித்து தெரிந்து கொண்ட யூனிட் ஆட்கள் ஹன்சிகாவின் வளர்த்திக்கு ஒரு சரியான காரணம் கண்டு பிடித்துவிட்டார்கள்.
அதைதான் போகிற இடத்திலெல்லாம் பரப்பி வருகிறார்கள். முன்பு மந்த்ரா என்றொரு நடிகை இருந்தார். அவர் எப்படி ஹார்மோன் ஊசியை போட்டுக் கொண்டு பெரிய மனுஷியாக காட்சியளித்தாரோ, அதே மருத்துவ மகத்துவம்தான் இவர் விஷயத்திலும் என்கிறார்கள். எது உண்மையோ?
தரணி மீது கோபம்
தில் து£ள் குருவி இயக்குனர் தரணியை எங்காவது மேடையில் சந்தித்தால் கூட உர்ரென்று முகத்தை வைத்துக் கொள்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி. அதற்கு காரணம் இருக்கிறது. தமிழில் படமே இல்லாமல் இருந்த தரணியை தெலுங்கு படம் ஒன்றை இயக்கும்படி வாய்ப்பு கொடுத்தாராம்.
படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டாம் நாளில் இருந்தே தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் தரணி. கன்னாபின்னாவென்று செலவுகளை இழுத்துவிட்டதுடன் படத்தின் ஹீரோ பவன் கல்யாணுடனும் தகராறு ஏற்படுத்திவிட்டாராம்.
இதையெல்லாம் சென்னையில் இருந்தே கேள்விப்பட்ட சவுத்ரி, ஆரம்ப செலவு சில லட்சங்கள் ஆகியிருக்கும். அதோடு போகட்டும் தொந்தரவு என்று படத்தையே நிறுத்திவிட்டாராம். இப்போது சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் தரணி.
ஆனால் தமிழ்நாட்டு மேடைகளில் அடிக்கடி இருவரும் சந்தித்துதானே ஆக வேண்டும். அந்த நேரத்தில்தான் இப்படி முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள் இருவரும்.
நிஜத்திலும் வில்லன்?
மைனா ஒளிப்பதிவாளர் சுகுமாறனின் அண்ணன்தான் டைரக்டர் ஜீவா. இவரும் ஒரு ஒளிப்பதிவாளர்தான். டைரக்ஷன் ஆசையில் முதல் தொழிலை கைவிட்ட இவர் இயக்கிய முதல் படம் மயிலு. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் உருவான படம் அது. படத்தை முடித்துக் கொடுத்தே மூன்றரை வருடங்கள் ஆகிவிட்டன.
இன்னும் அதை ரிலீஸ் செய்கிற முயற்சியை செய்யவே இல்லை பிரகாஷ்ராஜ். இதற்கிடையில் பா.விஜய் நடித்த ஞாபகங்கள் படத்தை இயக்கினார் ஜீவன். இதில் பா.விஜய்யின் தலையீடு அதிகம் இருந்ததால் மோசமான டைரக்டர் என்ற பெயர் கிடைத்துவிட்டது அவருக்கு.
இருந்தாலும் மயிலு வந்தால் தன் தலையெழுத்து மாறும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர். சமீபத்தில் நடந்த பாடல் வெளியிட்டு விழா ஒன்றில், பிரகாஷ்ராஜ் படத்தில் எப்படி வில்லனோ, அப்படிதான் நிஜ வாழ்விலும் இருக்கிறார்.
இல்லையென்றால் மயிலு படத்துடன் துவங்கப்பட்ட வெள்ளித்திரை, அபியும்நானும், இனிது இனிது படங்களை வெளியிட்டுவிட்டு இந்த படத்தை நிறுத்தி வைப்பாரா என்று கண்கலங்கிவிட்டார். இந்த பேச்சு திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் விஜயகாந்த்
தேர்தல் பிரச்சாரத்திற்காக வேகாத வெயிலில் அலைந்து பயங்கர கருப்பாகிவிட்டார் விஜயகாந்த். அது மட்டுமல்ல, இந்த தேர்தல் அவருக்கு தந்த எரிச்சல்களும் அதிகம்தான். இதையெல்லாம் தணிக்கும் விதத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்குள் ஒரு வெளிநாட்டு டூர் அடித்துவிட வேண்டும்.
அதுவும் குடும்பத்தோடு என்று கருதியிருந்தார். அவரது ஆசை ஜெர்மனிக்கு போக வேண்டும் என்பதுதானாம். அதற்கான முயற்சியிலும் இறங்கினாராம். ஆனால் விசா கெடுபிடிகள் காரணமாக அந்த பயணம் இழுத்துக் கொண்டே போய்விட்டது.
இனிமேலும் பொறுத்திருந்தால், டூர் புரோகிராமே அதோகதியாகிவிடும் என்று நினைத்தாராம். சரி.. அந்த நாடு தேவையில்ல. இத்தாலிக்கு புக் பண்ணுங்கப்பா என்றாராம் டிராவல்ஸ் நிறுவனத்திடம்.
அது சட்டென்று கிடைத்துவிட்டது. குடும்பத்தோடு கேப்டன் அங்கதான் இருக்கார் இப்போது. அப்படியே தீவிரவாதிகள் யாராவது திரியுறாங்களான்னு மழை கோட்டு போட்டுகிட்டு தேடிப் பாருங்க.
No comments:
Post a Comment